உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

வண்ணக் கனவுகள்!நம் எண்ணங்களோடுநல் வண்ணங்கள் சேர்த்துவாழ்க்கை பூக்களைவசந்த பூங்காக்களாக்ககனவுகள் காண்போம்!மஞ்சள் நிறக்கனவில்மனம் தஞ்சம் அடையட்டும்வாழ்க்கை எச்சரிக்கையாகதடம் பதிக்கட்டும்!சிவப்பு நிறக்கனவையும்சிறிதாய் மனம் சினேகிக்கட்டும்வாழ்க்கையின் வறுமைக்குவசந்த வழி தேடட்டும்!ஊதா நிறக்கனவில்மனம் ஊஞ்சலாடட்டும்வாழ்க்கை உதிரிப் பூக்கள்என்பதை உணர்த்தி செல்லட்டும்!நீல நிறக்கனவில்மனம் நிலை கொள்ளட்டும்வாழ்க்கை வானம் போல வளர்ந்துவாகைப்பூக்கள் சூடட்டும்!காவி நிறக்கனவில்மனம் காத்துக்கிடக்கட்டும்வாழ்க்கை தியாக சுடர் சுமந்துதேசம் செம்மையடையட்டும்!வெள்ளை நிறக்கனவில்மனம் மவுனமாகட்டும்வாழ்க்கை அமைதிப்புறாக்களாகஅகிலமெங்கும் வலம் வரட்டும்!பச்சை நிறக்கனவில்மனம் இச்சை கொள்ளட்டும்வாழ்க்கை பசுமைகளாகவளமை வண்ணம் கொழிக்கட்டும்!வண்ண வண்ண கனவுகளில்நல் எண்ண வாசம் சேர்த்துவசந்த கால வாழ்க்கைக்குவளமான தளம் அமைத்துவலிமையான தூண்களாகதுணை நிற்போம்!க.அழகர்சாமி, கொச்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !