கவிதைச்சோலை
விளம்பரம்....பத்திரிகைகளில் செய்திகளை விடபக்கம் பக்கமாய் விளம்பரங்கள்கண்களை கவர்கின்றனபண்டிகைக் காலங்களில்...கட்டழகு கன்னியரின்வண்ண வண்ண உடைகளில் பட்டுப் புடவைவிளம்பரங்கள்...கவர்ச்சிப் பெண்களின்கழுத்து நிறையவித விதமாய் அலங்கார நகை விளம்பரங்கள்...ஐநுாறு ரூபாயில் இருந்துஐம்பதாயிரம் ரூபாய் வரைகலர் கலரான கைபேசிவிளம்பரங்கள்...வீட்டுப் பொருட்கள்அலங்காரப் பொருட்கள்கம்ப்யூட்டர், ஐ பேட், 'டிவி'ஐ போன் விளம்பரங்கள்...பளபளக்கும் புது மாடல்சொகுசு கார்கள் இரு சக்கர வாகனங்களின்அணிவகுப்பு விளம்பரங்கள்...சென்னையிலிருந்துகுமரி வரை மனை மற்றும்அடுக்குமாடி குடியிருப்புவிளம்பரங்கள்...எதை எப்போது... எப்படி வாங்குவது?புரியாமல் தவிக்கின்றனர்ஓசி பேப்பரை படித்துக்கொண்டிருப்போர்!'சொல்கேளான்' ஏ.வி.கிரி, சென்னை.