கவிதைச்சோலை!
எது அவமானம்? வீழ்வது அவமானமல்லவீழ்ந்தே கிடப்பது தான்அவமானம்!பொறுமை காப்பதுஅவமானமல்லசோம்பலாய் இருப்பது தான்அவமானம்!கோபம் கொள்வதுஅவமானமல்லகாரணமின்றி கோபப்படுவது தான்அவமானம்!ஆசைப்படுவது அவமானமல்லபேராசைப்படுவது தான்அவமானம்!பேசுவது ஒன்றும்அவமானமல்லதேவையற்றதை பேசுவது தான்அவமானம்!அறியாமை ஒன்றும்அவமானமல்லஅறிந்துகொள்ள முயலாதது தான்அவமானம்!தவறு செய்வது அவமானமல்லதெரிந்தும் திருத்திக் கொள்ளாதது தான்அவமானம்!வெ.பரமசிவன், சென்னை.