உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

அதிசய அரசியல்!ஆச்சரியமாய் இருக்கிறதுஇந்த அதிசய அரசியல்!விடுதலை நாளை விட்டுவிட்டுஅடிமையான தினத்தையல்லவாஆராதிக்கின்றனர்!விழுந்ததைக் கொண்டாடவிழா எடுப்பதும்...அதை விழுந்து விழுந்து கொண்டாடுவதும்இங்கு தான் நடக்கிறது!கட்சித் தாவல் அங்கீகரிப்புக்குசட்டமே இருக்கிறதுஅதனால் இது அதிசய அரசியல்!ஆள் கடத்தல் உண்டுஒரு நபர்கூட்டத்தை கடத்துவதல்ல...கூட்டமாய்ஒரு நபரை கடத்துவதால்இது அதிசய அரசியல்!கொள்கைகள்ஒத்து வராததால் அல்ல...கொள்கைகள் ஒத்து வருவதால்நிகழும் கட்சித் தாவல்ஆள் கடத்தல்...அதனால் இது அதிசய அரசியல்!பணத்தாசைக்குவிலை போகாத விந்தைஇதில் இருப்பதால்இது அதிசய அரசியல்!இங்கேஅமைக்கப்படும் ஆட்சிஐந்து ஆண்டுகளில்காலாவதியாகி விடாது...காலா காலத்திற்கும் தொடரும்!அதனால் இது அதிசய அரசியல்!இங்கேதேர்தல் முடிவுகள்தெரிவதற்கு முன்பேஆனந்தமாய் கொண்டாடப்படுகிறதுவெற்றியை கொடுக்கப் போகும்ஒரு தினம்...அதுதான், 'காதலர் தினம்!'பாலமுருகன், தென்காசி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !