கவிதைச்சோலை!
நகைப்பிற்குரியவர்கள்!சாலை விதிகளைசகட்டு மேனிக்கு மீறும்நாங்கள் தான்சகல கலா வல்லவர்கள்!விளை நிலங்களைவீட்டு மனைகளாக விற்று தரும்நாங்கள் தான்விற்பன்னர்கள்!காணும் பொருட்களிலெல்லாம்கலப்படம் செய்யும்நாங்கள் தான்கண்ணியம் மிக்கவர்கள்!போதைப் பொருட்கள்பொதுவுடமை ஆக்கும்நாங்கள் தான்போற்றுதலுக்குரியவர்கள்!அனைத்து போராட்டங்களுக்கும்ஆள் திரட்டித் தரும்நாங்கள் தான்அசகாய சூரர்கள்!வரதட்சணை என்ற பெயரில்வாங்கிக் குவிக்கும்நாங்கள் தான்வருங்கால இந்திய துாண்கள்!ஊழியம் எதுவும் செய்யாமல்ஊதியம் வாங்கும்நாங்கள் தான்உழைப்பாளர்கள்!கொடுத்த வாக்குறுதியைகுழி தோண்டி புதைக்கும்நாங்கள் தான்கோமான்கள்!கல்விக்கு, கணக்கு வழக்கின்றிகட்டணம் வசூலிக்கும்நாங்கள் தான்கல்வி தாளாளர்கள்!நல்லதே நடக்குமென்றுநம்பிக் கொண்டிருக்கும்நாட்டு மக்களேநகைப்பிற்குரியவர்கள்!பெ.கருணைவள்ளல்,சென்னை.