கவிதைச்சோலை!
இல்லையென ஆகிவிடுமா?கண்களுக்கு தெரிவதில்லைஎன்பதாலேயே அதுஇல்லையென ஆகிவிடாது!காற்றில் கலந்து வரும்நறுமணத்திற்கு உருவமில்லை...ஆனாலும், அதை நாம்முகர்ந்து அனுபவிக்கிறோம்!வாடைக் காற்றுக்குஉருவமில்லை...உடல் சிலிர்ப்பதிலிருந்துஉணர்ந்து கொள்கிறோம்!ஒலிக்கு உருவமில்லை...மெல்லிசையைசெவிப் புலனால்அனுபவித்து மகிழ்கிறோம்!ஒளிக்கும் உருவமில்லை...கண்களை கொண்டேவெளிச்சத்தில் அழகைகண்டு மகிழ்கிறோம்!அவ்வளவு ஏன்...மனிதர்களையும்எல்லா ஜீவராசிகளையும்இயங்க வைக்கும்உயிருக்கே உருவமில்லை!இப்போது சொல்லுங்கள்...கண்களுக்கு தெரிவதில்லைஎன்பதாலேயே, கடவுள்இல்லையென்று ஆகிவிடுமா?— என்.கிருஷ்ணமூர்த்தி, மதுரை.