கவிதைச்சோலை!
மாற்றம் என்பது...முகஸ்துதி செய்வதும்முழங்காலிட்டுமண்டியிடுவதும் தான்இன்றுமுதல் மரியாதைஎன்றாகி விட்டது!சொத்துகளை மதிப்பிட்டுசொந்தங்களைதீர்மானிப்பது தான்இன்று, 'சுற்றுச்சூழல்'என்றாகி விட்டது!மற்ற வாத நோய்களை விடமதவாத நோயாளிகளேமண்டிக்கிடப்பது தான்இன்றுமதசார்பின்மைஎன்றாகி விட்டது!கை நிறைய சம்பளம்வாங்கினாலும்கையூட்டு வாங்குவது தான்இன்றுகலாசாரம்என்றாகி விட்டது!வித்துக்களை வைத்துவிளை நிலங்களைதீர்மானிப்பது தான்இன்றுவிவசாயப் புரட்சிஎன்றாகி விட்டது!மணல் அள்ளிமாபியாக்கள் ஆவதுதான்இன்றுமகத்தான புரட்சிஎன்றாகி விட்டது!குடி கொடுத்துகுடி கெடுத்துகோலோச்சி வருவது தான்இன்றுகுடிமக்கள் அரசுஎன்றாகி விட்டது!இலவசம் கொடுத்துஎதையும் சாதிக்கலாம்என்பது தான்இன்றுஎழுதாத விதிஎன்றாகி விட்டது!வாங்கிய பணத்துக்குவாக்கைச் செலுத்துவதுஎன்பது தான்இன்றுவாக்குத் தவறாமைஎன்றாகி விட்டது!ஆகையால்...மாற்றம் என்பதுசெய்யும் அவலங்களில்தெரிய வேண்டாம்...செய்யும் அலுவல்களில்தெரியட்டும்!பெ.கருணைவள்ளல், சென்னை.