கவிதைச்சோலை!
பாரம் சுமந்தே பயணிப்பவர்கள்!எங்கெங்கு சென்றாலும்எல்லாருமே எதையாவதுசுமந்தபடி தான் போகின்றனர்...பிரமுகர்களை பார்க்க போகின்றனர்மரியாதை நிமித்தம்மாலைகளுடனும், சால்வைகளுடனும்...கோவில்களுக்கு செல்கின்றனர்அனேக வேண்டுதல்களுடனும்கொஞ்சம் சில்லரைகளுடனும்...சிறைக் கூடங்களுக்கு செல்கின்றனர்சிற்றுண்டிகளுடனும்சிதைந்த வாழ்க்கை சித்திரங்களுடனும்...மருத்துவமனைக்கு போகின்றனர்ஆறுதல் மொழிகளுடனும்'ஹார்லிக்ஸ்' மற்றும் பழங்களுடனும்...இழவு வீடுகளுக்கு போகின்றனர்வலி மிகு ரணங்களுடனும்வலிந்து வரவழைத்த கண்ணீருடனும்...உறவுகளை தேடி போகின்றனர்சண்டைக்கான ஆயத்தங்களுடனும்குழந்தைகளுக்கான தின்பண்டங்களுடனும்...நண்பர்களை நாடிப் போகின்றனர்பொங்கிப் பெருகும் நினைவுகளுடனும்பொசுங்கிய கனவுகளுடனும்...இறந்த பின்பும் சுமந்து போகின்றனர்நிறைவேறா ஆசைகளையும்ஏகப்பட்ட பாவங்களையும்!— சோ.சுப்புராஜ், சென்னை.