உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

பொங்கட்டும் பொங்கல்!தைத் திங்கள் முதல் நாள்பொங்கல் திருநாள் - தமிழர்பொங்கலிட்டு மகிழ்ந்திடும்தமிழர் திருநாள்!நன்னாளாம் இந்நாளில்இயன்றதை இல்லார்க்குஇன்முகத்துடன் தந்திடுவோம்!புத்தாடை உடுத்திடுவோம்புதுப் பானையில் புத்தரிசி இட்டுபொங்கல் வைத்திடுவோம்!உலகிற்கு ஒளி தந்துஉய்விக்கும் கதிருக்குபொங்கலிட்டு வணங்கிடுவோம்...'பொங்கலோ பொங்கல்...' என்றுஉற்சாகமாய் முழங்கிடுவோம்!உழவர் வாழ்வு மேம்படஅவர் உள்ளமெல்லாம் களிப்புறபொங்கட்டும் பொங்கல் - எங்கும்தங்கட்டும் இன்பம்!வறுமை ஒழிந்திடவளம் பெருகிடபொங்கட்டும் பொங்கல் - எங்கும்தங்கட்டும் இன்பம்!மழை பொழிந்திடவீடும் நாடும் செழித்திடபொங்கட்டும் பொங்கல் - எங்கும்தங்கட்டும் இன்பம்!வேற்றுமை விலகிடஒற்றுமை பூத்திடபொங்கட்டும் பொங்கல் - எங்கும்தங்கட்டும் இன்பம்!அறம் செழித்திடஅமைதி நிலைத்திடபொங்கட்டும் பொங்கல் - எங்கும்தங்கட்டும் இன்பம்!செங்கரும்பின் சுவை போலவாழ்வென்றும் இனிதாகபொங்கட்டும் பொங்கல் - எங்கும்தங்கட்டும் இன்பம்!பொங்கட்டும் பொங்கல்புவி எங்கெங்கும்நிறையட்டும் இன்பம்!நெப்போலியன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !