கவிதைச்சோலை!
ஒரு உலகமாய் ஒன்றாவோம்!அம்பு எய்யும் முன்இலக்கை தீர்மானியுங்கள்எதிர்க்கும் முன்நோக்கத்தை சிந்தியுங்கள்!துாண்டி விட்டால்உடனே எரிந்து விடாதீர்துாண்டுகோல் மீதேசந்தேகப்படுங்கள்!எவர் சொன்னாலும்முழுமையாக நம்பாதீர்எந்த நாணயத்திற்கும்மறுபக்கம் உண்டு!வியாபாரியின் லாபம்ஆடுகளுக்கு தெரியாதுஅரசியல்வாதியின் திட்டம்அப்பாவிகளுக்கு புரியாது!போராட்டத்தில்முழக்கமிடும் கைகளை விடஉதவிக்கு நீளும் கைஉன்னதமானது!ஒவ்வொன்றாய் பிரிந்திருப்பதில்யாருக்கென்ன பயன்...ஒன்றாய் ஒருங்கிணைந்துஒரு உலகமாய் ஒன்றாவோம்!சி.கலாதம்பி, சென்னை.