கவிதைச்சோலை!
ஆசை... ஆசை....அரசியல்வாதிகளுக்குபதவி மேல் ஆசை...அல்லக்கைகளுக்குஉழைக்காமல் சாப்பிட ஆசை!கடின உழைப்பாளிகளுக்குஓய்வெடுக்க ஆசை...கல்லுாரி காளைகளுக்குகன்னியர் மேல் ஆசை!இல்லத்தரசிகளுக்குகுடும்பத்தின் மேல் ஆசை...இல்லத்தரசர்களுக்கோஊரை சுற்றி வர ஆசை!கொள்ளையடிப்பவருக்கோபணம் பதுக்க ஆசை...திருட்டுத்தனம் செய்பவருக்கோதவறை மறைக்க ஆசை!நேர்மையாய் நடப்பவருக்கோநீதியின் மேல் ஆசை...ஊழலில் திளைப்பவருக்கோமாட்டாமல் இருக்க ஆசை!சாமானிய மக்களுக்கோவசதியாக வாழ ஆசை...வசதியாய் வாழ்பவருக்கோநிம்மதியின் மேல் ஆசை!புண்ணியம் செய்பவருக்கோபுகழின் மேல் ஆசை...பாவங்கள் செய்பவருக்கோபரிகாரத்தின் மேல் ஆசை!இப்படி ஆசைகளின்பட்டியலை சிந்திக்கஎனக்கும் வந்தது ஆசை!இளம்பிறை பாரூக், சென்னை.