கவிதைச்சோலை!
நம் மகிழ்ச்சிதந்தையர்களேதாய்மார்களே...நீங்கள் வாழ்ந்தகாலம் வேறு!நம் பிள்ளைகள் வாழும்இக்காலம் வேறுகலாசாரம் வேறுநாகரிகம் வேறு!நகராட்சி தண்ணீர் வந்தாலும்,'கேன் வாட்டர்' தான்குடிப்பர்நம் பிள்ளைகள்!வீட்டில் அறுசுவைஉணவிருந்தும்'பீட்சா'விற்கு தான்'ஆர்டர்' கொடுப்பர்!குறைந்தது, 2 கி.மீ.,போவதாக இருந்தாலும்'கால் டாக்சி'யை தான்அழைப்பர்!லட்சம் லட்சமாகபணம் புடுங்கும்'கான்வென்ட்'டில் தான்படிப்பர்!சுக்கு, மிளகில் குணமாகும்நோய்களுக்கும்பெரிய மருத்துவமனைகளில்சிகிச்சை பெறுவர்!பெரிய பெரிய, 'மால்'களில் தான்ஆடை வாங்குவர்பண அட்டையைதேய்ப்பர்!எதையும் கண்டும்காணாமல் இருங்கள்எதுவும் பேசாதீர்அறிவுரை கூறாதீர்!அப்போது தான்வயதான காலத்தில்சண்டை சச்சரவின்றிகாலம் தள்ள முடியும்!பெற்று வளர்த்ததுயாருக்காக...பிள்ளைகள் மகிழ்ச்சி தானேநம் மகிழ்ச்சி!சொல்கேளான் ஏ.வி.கிரி, சென்னை.