கவிதைச்சோலை!
மன்னித்து விடுங்கள்...மனக் காயங்களைகுணப்படுத்தும் ஆற்றல்மன்னிப்பு எனும் மாமருந்துக்குமட்டுமே உண்டு!பழிக்கு பழி வாங்கதுடிக்கும் மனங்களில்அமைதி பறவைகூடு கட்டுவதில்லை!மன்னிக்கும் மனங்களில் தான்மகிழ்ச்சி பூக்கள்நொடிக்கு நொடிமலர்ந்து கொண்டே இருக்கும்!குறை காணும் போதெல்லாம்ஆனந்தத்தின் வாசல்களைஅடைத்து விடுகிறோம்!ஆம்...குறையே இல்லாத மனிதர் இல்லைகுறை மட்டுமே காண்பவன்மனிதனே இல்லை!இன்னா செய்தாருக்கும்நன்மை செய்யும்வள்ளுவரின் மனம் பெற்றவர்கள்மகிழ்ச்சி சிகரத்தில்வெற்றிக் கொடி பிடிக்கின்றனர்!- கவிதாசன், கோவை.