கவிதைச்சோலை!
ஒற்றை நாள் தவம்!இயந்திரங்கள் செய்யும்ஒற்றை நாள் தவம்ஆயுத பூஜை!ஹடயோக நிஷ்டையில்இயந்திரங்கள் லயித்திருக்கும்இனிய நாள் இது!மனிதன் கொண்டாடும்சதாபிஷேகம், சஷ்டியப்த பூர்த்தி போல்ஆயுள் நீட்டிப்பின் அடையாளம்ஆயுத பூஜை!ஆனால் -மனிதன் கொண்டாடும்ஆயுள் விருத்தி நாட்களை விடஅலாதியானது ஆயுத பூஜை!தனக்கான ஜோடியோடு மட்டும்மனிதன் சதாபிஷேகம் கொண்டாடுகையில்ஒட்டுமொத்த இயந்திரங்களும்மனித மேன்மைக்காககூட்டுப் பிரார்த்தனை செய்வதன் குறியீடேஆயுத பூஜை!இயந்திரங்களின்இந்த கூட்டு பிரார்த்தனையால்மனிதனின் ஆயுள் மட்டுமல்லஆஸ்தியுமல்லவா கூடுகிறது!இருந்த கோலம், கிடந்த கோலத்தோடுநடந்த கோலத்தையும் எடுத்துநம்மை வியக்க வைக்கிறது இயந்திரங்கள்!மனித கற்பனைகளுக்குவடிவம் கொடுத்துநனவாக்கி மகிழ வைக்கிறது இயந்திரங்கள்!இயந்திரங்கள்மவுனித்திருக்கும் ஒற்றை நாள்ஆயுத பூஜை!மற்ற நாட்களில்மனிதர்கள் மவுனமாய் இயக்கஇயந்திரங்கள் பேசும்!இன்றோஇயந்திரங்கள் மவுனமாய் இருக்கமனிதர்கள் பேசுவர்!மனிதன்நிலாவை கண்களால் வருடிசோறு உண்ணுகையில்இயந்திரங்கள் அங்கேகால்களை ஊன்றிதிரும்பின!மனிதன்செவ்வாய் என்று சிலாகிக்கையில்இயந்திரங்கள் அதை முத்தமிடும் மூர்க்கத்தில்முன்னேறுகின்றன!எனவே,அஃறிணைகளுக்குஆயுள் மட்டுமல்லஆத்மாவும் உண்டு என்பதன்அடையாளம் தான் ஆயுத பூஜை!கற்பனைகளுக்குநிஜ வடிவம் கொடுக்கும்இயந்திரங்களுக்கான இந்நாள்வந்தனைக்குரிய நன்னாள்!ஆர். கீதா குமாரி, திருச்செங்கோடு.