கவிதைச்சோலை!
கல்வித் திருநாள்!ஜூலை 15, கல்வி தினம்கல்விஒரு அதிசய கடல்புயல்கள் உருவாகாதுஅலைகள் இல்லாதஅமைதி கடல் அது தான்!இதன்தண்ணீர் உப்பு கரிப்பதில்லைஆனாலும்தாகம் தீர்க்கும்!அதில் பயணிக்கும் கப்பல்கள்தேடல்கள்...பயணிக்கையில்அவைஏற்றிக்கொள்ளும் சரக்குகளைஇறக்குவதே இல்லை!ஆரம்பத்தில்படகுகளாய் பயணிக்க துவங்கிகால வளர்ச்சியில்கப்பல்களாய்உருமாறும் அதிசயத்தை பார்க்கலாம்!இங்குகப்பல்களே முத்து குளிக்கின்றனஇந்த கப்பல்களுக்குகரை காட்டும்கலங்கரை விளக்குகள்ஒன்றல்ல, இரண்டல்லஓராயிரம்!கல்வி கடலில்முத்தெடுத்த கப்பல்களேகலங்கரை விளக்குகள்இந்த விளக்குகள்ஞானம் தேடும் கப்பல்களுக்குகடலின் கரை காட்டுவதை விடகடலின் ஆழம் காட்டியே அதிசயிக்க வைக்கின்றன!இங்கேகடல் எப்போதும் அமைதியாய் இருக்கும்சலசலப்பு அலைகளைசில சமயங்களில்கப்பல்கள் உருவாக்கும்!அந்தஅலைகளின் மோதலில் கூடஅமிழ்தம் பிறப்பெடுக்கும்அதுஅறிவுக்கு ஜீவன் விருந்தாய்இருந்து பசியாற்றும்!இந்த அதிசயங்களைஆராதிக்கவும், ஆமோதிக்கவும்'கல்வித் திருநாள்'நமக்கு கிடைத்தகவுரவத் திருநாள்!க. விஜயலட்சுமி, கடம்பூர்