உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

புண்பட்ட மனம், பண்படும் காத்திரு...சிந்திக்க தெரிந்தவன்வாழ்க்கையை வெல்கிறான் - நீசிந்திக்க தவறும் நொடியில்வாழ்க்கை உன்னை வெல்கிறது!கண் கூசும் சூரியன்மழை தரும் கருமேகம்மறைந்து முகம் காட்டும் நிலவுகண் சிமிட்டும் நட்சத்திரங்கள்எதையும் விட்டு விடாதே - உன்சிந்தனைக்குள் அசை போடு!புத்தகம் எதுவானாலும்படித்து முடி ஒரு வார்த்தைஉன் தேடலுக்குவழி காட்டலாம்!ஏட்டில் எதையாவது கிறுக்குஅது கதையா கவிதையாகவலைப்படாதே படிப்பவர்முடிவு செய்யட்டும்!உளியை எடு கல்லைஉடைத்து கொண்டே வாவிழுவது கல் சிதறலாஉருவாகும் சிலையா - அதுபார்ப்பவரின் முடிவு!தோண்டும் சுரங்கமும்குவிக்கப்படும் மேடும்பூமி கலங்குவதில்லைஉடலை குலுக்கிசுழல்வதை தொடர்கிறது!இயற்கை உணவைபடைத்த பின்உயிர்களை படைத்ததுபசியால் உயிர்கள்படுத்து விடக் கூடாதேஎனும் நல்லெண்ணத்தில்!புண் பட்ட மனம்பண் படும் காலம் வரும்அதுவரை துவளாதேஎதையாவது செய்பசியை போக்கவாவது உழை!உறக்கத்தில் தியானித்துகனவில் விடை தேடிகண்டுபிடிப்பால் உலகைஅசத்துபவன் விஞ்ஞானி!தன்னம்பிக்கையும், தைரியமும்இல்லாதவன் பின்னால்பேய்கள் பின் தொடர்வதுஇயல்பான ஒன்று!பணம் வேண்டுமாபட்டம் பதவிகளைமறந்து விடு...இறக்கை கட்டிசோம்பல் எல்லைகளை உடைத்து துணிவுடன் பற!இருபது வயதிற்குள் உன்திறமைகளை தெரிந்து கொள்நாற்பது வயதிற்குள்சம்பாதித்து சேர்த்து விடுஅறுபது வயதிற்குள்ஆன்மிகம் வழி காட்டும்!எதையும் செய்ய சோம்பலாசும்மா இரு சுகத்தை அனுபவிவாழ்க்கை கடலில்வழி தெரியாமல் தத்தளிக்கும் உன்னைகாலம் ஒருநாள் கரை சேர்க்கும்பாரதி சேகர், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !