கவிதைச்சோலை!
ஒற்றுமையின் வலிமை!உழைப்பு மிகுந்தஇடமெங்கும்தன்னம்பிக்கை பெருகிசெல்வம் கொழிக்கும்!கனிமவளம் நிறைந்திருக்கும்இடமெல்லாம்தொழில்வளம் பெருகிபொருளாதாரம் சிறக்கும்!தவறுகள் திருத்தப்படும்இடமெல்லாம்பாவங்கள் விலக்கப்பட்டுமன்னிப்புகள் குவியும்!உரிமைக்குரல் ஒலிக்கும்இடமெல்லாம்அநியாயங்கள் வெட்கிதலைகுனிந்து மரணிக்கும்!தன்னம்பிக்கை துளிர் விடும்இடமெங்கும்தயக்கங்கள் மறைந்துசாதிக்கும் வல்லமைதலை துாக்கும்!பாச உணர்வுகள் பொங்கும்இடமெல்லாம்பகைமை விலகிஒற்றுமையின் வலிமைஓங்கி நிற்கும்!மனிதநேயம் மிகுந்தஇடமெங்கும்மன கசப்புகள் ஒழிந்துஇனிய வாழ்க்கையில்சுவையை கூட்டி கொடுக்கும்!மணியட்டிமூர்த்தி, கோவை.