உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

வீழ்ந்து விடுவோமா, எழுந்து வருவோமா?வேளாண்மை, கல்விஉடல்நலம், வேலைவாய்ப்பில்இந்தியா அதீத வளர்ச்சி பெற்று,2020ல் வல்லரசாகி விடும் - என1998ல், கனவு கண்டார் அப்துல் கலாம்!இன்று இந்தியா சந்திப்பதோவேளாண்மைக்கு வெட்டுக்கிளிகல்வியில் தேர்வெழுதாமல்அனைவரும் தேர்ச்சிஉடல் நலனில் கொரோனாவிடுகிறது சவால்வேலைவாய்ப்பில் வீட்டிற்குள்ளேயேவேலை தேடல்!துாக்கத்தில் வருவது கனவல்லநம்மை துாங்க விடாமல்செய்வதே கனவுஇன்றோ, 'டிவி'யிலேயேவெளியுலகை காண்கிறோம்வெளியுலகிற்கு செல்வோமாஎன்பதே கனவாகி வருகிறது!வெட்டுக்கிளியை விரட்டியடித்து...நிகழ் நிலையில் கல்வி கற்று...கபசுர குடிநீரால் கொரோனாவை விரட்டிஉள்ளூரில் கிடைத்த வேலை செய்துநிச்சயம் எழுந்து வரும் இந்தியாவீழ்ந்து விடாது, கலாமின் கனவு!பா. ரஞ்சித்ராணி, விருதுநகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !