உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

சிறியனவற்றுள் சிறந்தது!சிறு தீக்கங்கு போதும்பெருங்காடு அழிந்துசாம்பலாய் போவதற்கு!சிற்றுளி ஒன்று போதும்பெரு மலையைப் பெயர்த்துஇல்லாமல் செய்வதற்கு!ரம்பத்தின் சிறு முனைகள் தான்பெரியதொரு மரத்தை அறுத்துமண்ணில் சாய்க்கின்றன!முள்ளின் சிறு நுனிகால்களை ரணமாக்கிகாணாமல் செய்யவும் கூடும்!பிள்ளைப் பருவத்து சிறு பகையேபெரியதொரு பாரதப் போருக்குவழி வகுத்தது!சின்னஞ்சிறு ஊசியேபெரியதொரு கிழிசலைஅழகாய் இணைத்து விடுகிறது!சிறிய துடுப்பொன்றுபெருங்கடலை நீந்திக் கடக்கபேருதவி செய்கிறது!சிறு புள்ளியிலிருந்தேசிறந்ததொரு ஓவியம்வாய்க்கப் பெறுகிறது!விழும் சிறு துளிகள் தான்பெரு நதியாய் ஓடிநம் தாகம் தீர்க்கிறது!சிறு புன்னகையேபெரியதொரு நட்பிற்குவழி வகை செய்யும்!சிறியனவற்றுள் எது சிறந்ததோஅதை நம் சிந்தையில் கொள்வதேசிறந்தது - சிறப்பு!இ.எஸ். லலிதாமதி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !