உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

எதிரி!காதலிப்பவரின் விருப்பத்தைதெரிந்து கொள்ளாமலேயேகாதலிக்க ஆரம்பித்து விடுகின்றனர்இன்றைய இளைஞர்கள்!காதலுக்கு ஜாதி, மதம், இனம், மொழிவயது, அழகு, அந்தஸ்துஎதுவும் தடையில்லைபரஸ்பர சம்மதம் தேவை என்பதை ஏனோமறந்து விடுகின்றனர் நவீன காதலர்கள்!கொலை, கொள்ளை, பொறுக்கிரவுடி, படிக்காதவனை எல்லாம்காதலிக்கிறாள் பணக்கார வீட்டு பெண்திரைப்படங்களில்!எதுவும் தவறு இல்லைநீ அடிமையாக இருக்காதேஎதிர்த்து பேசு என்று பெண்களுக்குசொல்லிக் கொடுக்கிறது'டிவி' சீரியல்கள்!கைபேசி, முகநுால், மின்னஞ்சல் இணையம், 'வாட்ஸ் - ஆப்' போன்றஅறிவியல் சாதனங்கள் எல்லாம்தீமைகளையே விளைவிக்கின்றன!உண்மையான அன்பு, பண்புபற்று, பாசம், நேசம் அனைத்தும்கவர்ச்சி, ஒப்பனை, தோற்றம், வருமானம்இவைகளிடம் தோற்று விடுகின்றன!எழுபது வயது முதியவர்கள்காதலுக்கு எதிரிகள் என்றுநினைத்துக் கொண்டிருக்கின்றனர்இளம் வயது காதலர்கள்...எப்படி அவர்களுக்கு புரிய வைப்பதுநாங்கள் காதலுக்கு எதிரிகள் அல்லசாதலுக்கு தான்!சொல்கேளான் ஏ.வி.கிரி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !