உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

சிந்தனை செய்வாய்!வண்ணம் குழைத்துவரையாத தாள்கள்வியக்க வைப்பதில்லை!கூட்டுக்குள் ஒடுங்கித்தவமில்லாத புழுக்கள்பட்டாம்பூச்சி ஆவதில்லை!மேகங்கள் மழையாகிமண் மேல் பொழியாமல்மரங்கள் வளர்வதில்லை!திட்டம் போட்டுச்செய்யாத செயல்கள்சிகரம் தொடுவதில்லை!பாதை அறியாமல்போகும் பயணம்ஊர் போய்ச் சேருவதில்லை!நெற்றி வியர்வைநிலத்தில் விழாமல்நெல்மணி விளைவதில்லை!ஆயிரம் மலர்களைஅலைந்து திரியாமல்தேன் துளி கிடைப்பதில்லை!வீசும் புயலுக்குவளைந்து கொடுத்திடநாணல் மறுப்பதில்லை!உளியால் அடி வாங்காதகற்கள் எவையும்சிற்பம் ஆவதில்லை!ஒழுக்கம் இல்லாதமனித வாழ்வைஉலகம் மதிப்பதில்லை!எஸ். குமாரகிருஷ்ணன், புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !