உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

மனிதன் மட்டும்!நிலத்திற்கு பேதமில்லைஉழுதாலும், விதைத்தாலும்பூத்துக் குலுங்கும்!நதிகளுக்கு பேதமில்லைகாட்டிலும், மேட்டிலும்களிநடம் புரிவாள்!காற்றுக்கு பேதமில்லைதென்னையிலும், பனையிலும்தெம்மாங்கு பாட்டிசைக்கும்!வானிற்கு பேதமில்லைநீல பட்டாடையில் எந்தகவிதைக்கும் ஓவியமாகும்!கல்லறையிலும் கொடிகட்டும் அரசியல்காற்று மாசைசுட்டிக் காட்டுமா!இல்லாத ஜாதி தாழ்வைஒழிக்க இனோவா காரில்பவனி வரும் பண முதலை!ஊர் அறிய மணம் செய்துஉலகறிய பிரிவைகொண்டாடும் குடும்ப மாண்பு!கோடிகளை குவித்துகைதானாலும் அவமானத்தையும்ஏலமிடும் அரசியல்வாதி!வேடந்தாங்கல் பறவைக்குநாடு, மொழிஜாதி பேதமில்லைகூடி மகிழ்கிறது!நதியை தடுத்துவிண்ணை மண்ணை கெடுத்துகாற்றையும் விலை பேசும்மனிதன் மட்டும் இனிதிருந்துவது எப்போது?பாரதி சேகர், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !