கவிதைச்சோலை!
பயன்படாத பிரம்மாஸ்திரம்!* என்பிரம்மாஸ்திரங்களில்என்ன குறை?எதனால் என்னால்வெற்றி பெற முடியவில்லை!* அவமானங்களை மட்டுமேஅள்ளித் தருகிறதேஅஸ்திரங்கள்...பிரயோகிப்பதில் குறையா?இல்லை அவைபெருமை மிக்கவை இல்லையா?* எதிரிகள் மீதுவைத்த அஸ்திரங்களை விடஅவர்களால்தைத்த அஸ்திரங்களேஅதிகமாய் தெரிகின்றன!* எனக்கு நிகழ்வதுஎன்றேனும்உங்களுக்கும் நிகழ்ந்ததுண்டா?எதிரி எழுச்சி பெறநீங்கள் -நிலைகுலைந்து போனதுநிகழ்ந்திருக்கிறதா?* அப்படியானால் —என்னை போலத்தான் நீங்களும்!* எதிரிகளையும் வீழ்த்தஅன்பு, பரிவுஈகை, இரக்கம்மன்னிப்பு, மனிதநேயம்இப்படி -ஆயிரம் அஸ்திரங்கள் இருக்கையில்அனாயசமாககோபக் கணைகளால்குறி பார்த்தது ஏன்?* அதனால் —நண்பர்களுமல்லவாஎதிரிகளாயினர்!* கோபம் —பிரம்மாஸ்திரமல்ல..பிரயோகிக்கக் கூடாதபிழையான அஸ்திரம்!காரணம் —வாழ்க்கை போர்க்களமல்லநீயா, நானா பார்ப்பதற்கு!* நிலையற்றது என்பதைநிறுவும்சத்திரம்!இதில் —அஸ்திரமெடுத்து அழிந்து போவானேன்? சேர்ந்து களித்துசிரித்து போகலாமே!— ஆர்.கோகுலன், பொள்ளாச்சி.