உள்ளூர் செய்திகள்

கவிதை

கண்களும்  வேண்டாம்

*காதலுக்கு கண்ணில்லைஎன்றவன் மூடன்...உடல், பொருள், ஆவியெனமுழுதாய் உன்னைச் சரணடைந்த பின்பார்வை என்று ஒன்று மட்டும்எனக்கெதற்கு?

*நான் அறியா வண்ணம்நீ என் கண்கள் மூடிய பொழுதில்இவ்வுலகம் தன் கண்கள் மூடிஇருள் கொண்ட தென்பது இதுவரைநீ அறியா ஒன்று!

*உலகின் கண்களால்நீ வேறுநான் வேறுஎனப் பிரித்தறியப்பட்டாலும்இருவரும் ஒன்றென அறியும்நம் காதலின் கண்கள் மட்டும்!

*நான் உனக்கு பரிசளித்தபூக்களின் நிறமும், மணமும்மட்டுமே அறிய முயற்சிக்கும் - இவ்வுலகம்அதில் ஒளிந்து கிடக்கும்என் காதலை அறிய முற்படாததன்ரகசியம் இன்னும் புரியவில்லை எனக்கு!

*உன் நடையின் சப்தம்மவுனத்தின் நிசப்தம்இவை யாவும் கூடநம் காதலின் சங்கேத பாஷைகள் தாம்...இவ்வுலகறியா புதிர்களில் இவைகளுமொன்று!

*காதலர் தின நாளொன்றில்பரிசாய் நீ அளித்து சென்றகைக்கடிகாரம் கூடமுட்கள் அற்ற மலராய்த்தான்தோன்றுகிறது என் காதலின் கண்களுக்கு!

*என் கண்கள் இரண்டையும்நீ குத்தகைக்கு கொள்ள தயாரென்றால்தூக்கம் கூட வேண்டாம்...கனவுகள் மட்டும்போதுமெனக்கு!

*மிக அரிதாய்நாம் பிரிந்த வேளைகளில் கூடநம் காதலை மெய்ப்பித்ததுகடிதங்கள் மட்டுமல்லகனவுகளும் கூடத்தான்!

*கண்கள் என்ற ஒன்றுஇருந்தால் தான்கனவுகள் வரும் என்பதில்லை...காதல் மட்டும்இருந்தால் போதும்கனவுகளை பொறுத்தவரை!  — பி.மாயா, இடைகால்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !