கவிதைச் சோலை - என்று வரும் !
* வழங்கப்பட்டவாழ்நாளை நினைக்காமல்...சந்ததிகளுக்காகவேஅதை —சந்தனமாய் தேய்த்து...அந்திமத்தை எட்டியஅப்பாவிகள்!*விருப்பங்களைமறுதலித்த பிள்ளைகள்...வேண்டுகோள்களைப்புறக்கணிக்கும் மருமகள்களின்உதாசீனங்களில் ஒடிந்து<உயிர் ஒழுகமீந்துபோன மிச்சங்கள்!*கொடுக்கும் அறிவுரைகட்கும்கொட்டும் அன்பிற்கும்சந்தேகம் ஒன்றே மிஞ்சஅங்கீகாரம் பெறமுடியாதஅவலத்தின் குறியீடுகள்!*பென்ஷன் தேதிகளில்பெறப்படும் பணத்துக்காக...விசாரிப்புகள் தேடிவரும்வேதனையின்விலாசங்கள்!*மாத்திரைகளின்வட்டச் சக்கரத்தேர் உதவியால்...உயிரை உட்கார வைத்துவலம் வந்துக் கொண்டிருக்கும்வயோதிகச் சாரதிகள்!*மருந்துகளின்மயக்கும்ஆல்கஹால் கரைசல் போதையில்கவலை மறக்கும்காலத்தின் மிச்சங்கள்!*இந்த —வயோதிகர்களைஜடமாய் பார்க்கும்காலம் மாறி —சக மனிதராய் நேசிக்கும் பக்குவம்இளமை இறுமாப்புக்குஎன்று வரும்?— க.ராஜேஸ்வரி, உடுமலைப்பேட்டை.