உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - மேலான சொத்து!

காலம் என்பது காட்டாறு...அதுயார் கட்டுப்பாட்டுக்கும்நிற்காது!வயது என்பதுபூவாகும்...அதுபூத்து உதிர்ந்த பின்திரும்பாது!வாழ்க்கை என்பதுவரலாறு...அதுதடம் பதித்தவருக்கேஉரியது!லட்சியம் என்பதுநற்கனவு...அதுமுயன்று பார்ப்பவருக்கேஏற்றது!செய்வனவற்றைகாலம் தாழ்த்தாதுசெய்து முடித்திடவயது ஒருபொருட்டே அல்ல!சாதனையாளராய்வாழ்க்கையை வாழ்ந்துவருங்கால சந்ததிக்குவழிகாட்டி உதவிடதடையொன்றும் இல்லை!நீர் வற்றும் வரைதெரிந்திடும் பிம்பம் போலநிலையில்லா வாழ்வில்நிலைத்த புகழைப் பெறபேராவல் கொள்ளுங்கள்!ஒவ்வொரு செயலும்கற்பிக்கிற அனுபவ பாடத்தைகவனமாய் சேகரித்துமேலான சொத்தாகவிட்டுச் செல்லுங்கள்!— வெ. பாலமுருகன், திருச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !