உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை! - பூக்களின் தீபங்கள்!

மல்லிகை பூதீபம் ஏற்றிமணக்கும் மாலைகளாக்கமனித குணங்கள் வளர்த்திடுவோம்!மகிழம்பூதீபம் ஏற்றிமகிழ்ச்சி மலர்களாக்கமகளிர் மனங்கள் வளர்த்திடுவோம்!அல்லி பூ தீபம் ஏற்றிஅழகு பூங்காக்களாக்கஅன்பு உள்ளங்கள் வளர்த்திடுவோம்!ரோஜா பூதீபம் ஏற்றிஜோராய் ஜொலிக்கசோலை வனங்கள் வளர்த்திடுவோம்!தாமரைப்பூதீபம் ஏற்றிதாவர தோட்டங்களாக்கதங்க கரங்கள் வளர்த்திடுவோம்!ஆவாரம் பூதீபம் ஏற்றிஅடர் வனங்களாக்கஆசை நெஞ்சங்கள் வளர்த்திடுவோம்!அத்திப்பூதீபம் ஏற்றிஅகிலம் அழகாக்கஅகில் மரங்கள் வளர்த்திடுவோம்!பூவரசம்பூதீபம் ஏற்றிபூ பூக்கும் சோலைகளாக்கபுள்ளின கூட்டம் வளர்த்திடுவோம்!தாழம்பூதீபம் ஏற்றிதாழை தடாகங்களாக்கதன்னார்வ எண்ணம் வளர்த்திடுவோம்!புன்னகைப்பூதீபம் ஏற்றிபுத்தம் புது பூமி படைக்கநித்தம் ஒரு தீபம் வளர்த்திடுவோம்!— க. அழகர்சாமி, கொச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !