கவிதைச்சோலை - நெற்றிக்கண் பாரதி வேண்டும்!
உழவுக்கும் தொழிலுக்கும்வந்தனை செய்வோம் என்றாய்...உழவு செய்தகிழவனோடு சேர்த்துஉழவினைஒதுக்கி விட்டோம், பாரதி!காணி நிலம் வேண்டும் என்றுகனவு கண்டாய் இங்கே...காணும் நிலமெல்லாம்வானுயர்ந்த கட்டடங்களாகி விட்டது, பாரதி!மாதர் தம்மை இழிவு செய்யும்மடமையை கொளுத்துவோம் என்றாய்...மடமையை மட்டுமல்லமாதரையேகொளுத்துகின்றனர், பாரதி!பட்டங்கள் ஆள்வதும்சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள்நடத்த வந்தோம் என்றாய்...இன்று மது, 'பாரு'க்குள்பெண்கள் நடப்பது கண்டு நெஞ்சு பொறுக்குதில்லை, பாரதி!ஆணுக்கு பெண் நிகரென்றாய்...திருமணமே இல்லாமல்ஆணும் - பெண்ணும்சேர்ந்து வாழும் நிலை கண்டுமனம் பதறுதே, பாரதி!ஆலைகள் வைப்போம்கல்விச்சாலைகள் வைப்போம்என்றாய்...சாராயச்சாலைகள் வைத்துவியாபாரச்சாலைகள்நடத்துகின்றனர், பாரதி!இனி இவர்களைசாட்டை எடுத்து வேட்டையாடஇளைய பாரதத்தினர்உதய ஞாயிறு ஒப்பவேஏறு போல் நடையினாய் வரட்டும்!— என்.ஆசைத்தம்பி, சென்னை.