கவிதைச்சோலை - சுதந்திரம் என்பது...
சுதந்திரம் என்பதுமனித உரிமையின் நிரந்தர மூச்சுமனித உணர்வுகளின் அந்நியோன்ய பேச்சு!சுதந்திரம் என்பதுநம் கடமையின் தாகம்பல பேரின் உடைமை, உயிரின் தியாகம்!சுதந்திரம் என்பதுஜாதி மத இனத்தின் தகர்ப்பு முயற்சிசரிவிகித மனிதநேயத்தின் சமத்துவ கலப்பு பயிற்சி! சுதந்திரம் என்பதுதனி மனித ஆளுமையின் உயிர்ப்புசமூகத் தடையின் சட்டப்பூர்வ உடைப்புபுது உலகத்தின் நவீன படைப்பு!சுதந்திரம் என்பதுஅடிமைத்தனத்தின் அகோர வீழ்ச்சிஅதன்பின்தான் ஆரம்பமானது அனைவரும் சமம் என்ற பேச்சு!சுதந்திரம் என்பதுசமதர்மத்தின் சாயாத வாய்ப்புசரித்திர விரோதிகளின் சதிகளின் சாய்ப்பு!சுதந்திரம் என்பதுஅவரவர் ஆதிக்கத்தின் எல்லையாரும் இனி அடிபணிய தேவையில்லை!சுதந்திரம் என்பதுஎல்லாருக்கும் எல்லாமுமான சொத்துஅதை தரவேபலரும் உயிர் துறந்தனர்!சுதந்திரம் என்பதுதாய் நாடு நமக்கு தந்த உயிர்அது பலரின் ரத்தத்தால் விளைந்த பயிர்! சுதந்திரத்தை கண் போல் காப்போம்நீடூழி வாழ வாழ்த்துவோம் அதைப் போற்றி... போற்றி!— தே.ராஜாசிங்ஜெயக்குமார், தஞ்சாவூர்.