கவிதைச்சோலை! - நம் கையில் தான்!
வருகிற சோதனைகள்நம்மை வாழ வைக்கின்றனஇல்லையெனில்வீழ வைக்கின்றன!முளைக்கிற பிரச்னைகள்நம்மை உருவாக்குகின்றனஇல்லையெனில்உடைத்துப் போடுகின்றன!வதைக்கிற வேதனைகள்நம்மை பலசாலியாக்குகின்றனஇல்லையெனில்பலியாக்கி விடுகின்றன!மிரட்டுகிற சங்கடங்கள்நம்மை மெருகேற்றுகின்றனஇல்லையெனில்பொலிவிழக்கச் செய்கின்றன!துரத்துகிற துன்பங்கள்நம்மை முறுக்கேற்றுகின்றனஇல்லையெனில்முடக்கிப் போடுகின்றன!தோன்றுகிற அச்சங்கள்நம்மை தெளிவாக்குகின்றனஇல்லையெனில்குழப்பி விடுகின்றன!உதிக்கிற அழுகைகள்நம்மை தேற்றுகின்றனஇல்லையெனில்உருக்கி விடுகின்றன!நடக்க வேண்டியவைநேர்மறையா எதிர்மறையாஎன்பதெல்லாம்நம் கையில் தான்!அ.ப. சங்கர், கடலுார்.