கவிதைச்சோலை - அம்மா எனும் மனுஷி!
மே 14 - அன்னையர் தினம்சொர்க்கம்பூமியிலேயே உண்டுஅம்மாவுக்கு நேசத்தோடுபணிவிடை செய்து பாருங்கள்!தெய்வம்உங்களுடனே உண்டுஅம்மாவை பக்தியோடுகால் தொட்டு வணங்குங்கள்!நீங்கள் கேட்டதெல்லாம்உங்களுக்கு கிடைக்கும்அம்மா வாய் திறந்து கேளாமல்குறிப்பறிந்து நீங்கள் கொடுத்தால்!அகிலமே கைக்கு கிடைக்கும்ஆனந்தம் எப்போதும் நிலைக்கும்அம்மாவின் மனம் கோணாமல்தேவைகளை நிறைவேற்றினால்!தியாகத் திருவுருவானஒரு தேவதையின் தோழமை கிட்டும்அம்மாவிடம் புன்னகை பூக்கபாசத்தை நீங்கள் பொழியும்போது!கருவறை சிம்மாசனத்திலிருந்துஇதய சிம்மாசனத்திற்கு இடமாற்றிஇறப்பு வரை இறக்கிடாமல் வைக்கும்அம்மா எனும் இணையற்ற மனுஷியைஅன்னையர் தினத்தில் மட்டுமின்றிஅன்றாடம் காத்து மகிழ்ந்திடுங்கள்!— ஆர். ஜெயசங்கரன், வானுார், விழுப்புரம்.