உள்ளூர் செய்திகள்

கவிச்சோலை!

இயற்கையோடு இயைந்த வாழ்வு இதுதானா?* இருண்டு கிடந்த சமூகத்தின்விடியல் கண்டான்...சின்னச் சின்ன ஆசைகளில்சிம்மாசனமிட்டான்!* கல்லை சிற்பமாக்கினான்...மின்னலை கைது செய்துமின்சாரம் கண்டான்!* நிர்வாணத்திற்கு விடை கொடுத்துதாவரங்களுக்குள்ஒளிச்சேர்க்கை செய்யும்உத்தி கண்டான்!* கண்ணீர் சந்தோஷத்தின்சமிக்ஞையை தரிசித்துமனிதனின் மகத்துவத்தைபதிவு செய்தான்!* சூரியன் தடுக்கி விழுகையில்சிந்தித்தான்...சிந்தித்ததெல்லாம்சித்திரமாக்கினான்!* இயற்கையின்முதுகில் சவாரி செய்துகணினி மயமாக்கினான்!* ஆனால் —பூமியின் தோளில் வெயில் போர்த்திபகலின் மடியில் வெப்பச் சலனம்அந்தி ஓய்வெடுத்தாலும்அடங்கவில்லை அனல்காற்று!* பூமியின் அக்னி கதவுதிறந்து கொண்டதால்பிரபஞ்ச நுரையீரல்சொந்த மூக்கில் சுவாசிக்கிறது!* கடலின் சுவாசப்பை அடங்கிகாற்று ஓய்வெடுக்க சென்றதால்பற்றி எரிகிறது பனிமலை!* அனல் சொட்டச் சொட்டஅக்னி மழையைஅள்ளித் தெளிக்கிறது இயற்கை...நீரின்றி காய்கிறது தேசம்!* கார்போ-ஹைடிரேட் புகைகாற்று மண்டலத்தை அடைத்துவேனில் காற்று வீசிவியர்வை நரம்பு அறுக்கிறது!* வெப்பச் சலனம்மழைக்காலம் பொய்த்து போய்பூமி ரத்தகளமாகிவாழ்வின் சாவுக்குவழி வகுத்து விட்டதுஇயற்கை அழிந்து!* காணி நிலம் கூட இல்லைமயிற்கூச்சங்களாய்வளர்ந்து நிற்கிறது கட்டடங்கள்!* ஏரிகள், குளங்களெல்லாம்தொழிற்சாலை...தண்ணீரில் ரசாயன கலவை...வாழ்வியல் முழுவதும்வைரஸ் கிருமிகள்!* இயற்கையை வென்று விட்டதாய்ஆர்ப்பரிக்கிறான்...மருந்தை உணவாகஉட்கொள்வது தெரியாமல்!* இயற்கையின் பேரழிவுக்குமனிதன் எடுத்த ஆயுதம்விஞ்ஞான வளர்ச்சி!* விஞ்ஞானத்தை கொண்டுஇயற்கையைவளர்க்க முடியுமா?* பருவநிலை மாற்றங்களால்கவலையுற்ற பூமாதேவி...அயர்ந்து கண்ணுறங்குகிறாள்...இயற்கையோடு இயைந்த வாழ்வுஇதுதானாவென்று!-க. மோகன், அறந்தாங்கி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !