உள்ளூர் செய்திகள்

கவிச்சோலை!

வீரிய வித்து!* ஒரு மணி நேரத்திற்குவிலை பேசினால்- விலை மகள்!* ஆயுளுக்கும் விலை பேசினான்- கணவன்!* பத்து நிமிடம் உடலைசுமப்பவளுக்கு கொடுக்கும்அங்கீகாரத்தை கூட,பத்து மாதம்தன் விந்தைசுமப்பவளுக்கு கொடுப்பதில்லைஇந்த அசிங்கம் பிடித்த சமூகம்!* பதினாறில்பெற்றவர்களின் சொல்லில்சிறையாகி...* இருபதில்மூன்று முடிச்சில் சுயம் தொலைத்து...* அறுபதில்தன் தொப்புள் கொடியேபாரமாய் நினைக்கையில்...* மரமாய்...மரம்பூப்பதுண்டு...சூடிக் கொண்டதில்லை!* மரம்காய்ப்பதுண்டு...புசிப்பதில்லை!* அதனால்,சில மரங்கள்முதியோர் இல்லங்களில்!* வீட்டிற்கு ஒரு மரம்வளருங்கள்...ஆனால்,பெண்களை மட்டும்மரமாய் வேண்டாம்!* அடுத்த தலைமுறையின்வீரிய மிகு வித்து...அவள்மறக்கிறீர்களே!— எஸ்.குமார், சென்னை.­


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !