கவிதைச்சோலை - தீபத்திரிகள்!
கன்னித் தமிழை தங்கக் கற்கண்டாய்கற்றுத்தந்தது இந்த ஆசிரியர் கூட்டம் - அதுஅன்னைத் தமிழை அகிலம் எடுத்துச் சென்றஆனந்த அறிவு பூந்தோட்டம்!கல்வி மீதினில் களங்கம் கொள்ளாதகாதல் கொண்டது இந்த ஆசிரியர் கூட்டம் - அதுசொல்லிக் கொடுத்து சுவை கூட்டுவதில்சொக்கத் தங்க தேரோட்டம்!அறிவு துாண்களாய் அடியில் நின்றுஆகாய பந்தலிட்டது இந்த ஆசிரியர் கூட்டம்அணி அணியாய் மாணவச் செல்வங்களைமதில் மேல் ஏற்றிவிட்டது மந்திரி கூட்டம்!சமுதாயம் சந்தித்த சீர்கேட்டை சந்தனகோட்டையாக்கியது இந்த ஆசிரியர் கூட்டம்சாதனைகள் பல செதுக்கி சரித்திரத்தில்வேதனைகள் வீழ்த்துவதே அவர்களது நாட்டம்!அணையாத அறிவொளிக்கு நிலவிளக்காய்இணைந்து நின்றது இந்த ஆசிரியர் கூட்டம்இனிக்காத செவிக்கெல்லாம் செந்தமிழூற்றிஇன்ப தேன் சிந்த செய்யும் கவித்தோட்டம்!எழுத்தறிவித்தவன் இவன் இறைவனென்றுபகுத்தறிவில்லாதவருக்கு பறை சாற்றுவோம்கல்வி வளர்த்தவன் இவன் கடவுளென்றுகல்லாதவரையும் நாம் கரை ஏற்றுவோம்!இன்னொரு ஜென்மம் இருக்குமேயானால்இவ்வாசிரியர் இனமே இவ்வுலகாள வேண்டும்என்னொரு காலமிது இனிய பொற்காலமிதுஎன்றொரு சொல் இனிதே பாய வேண்டும்!கல்வியறிவு கற்று தந்த கலை மேதைகளைகாணும் நேரம் கனிவாய் நாம் கை குவிப்போம்அறிவொளி ஏற்றிய அந்த ஆசிரியப் பெருமக்களைஅகிலம் உள்ள வரை, நெஞ்சில் நாம் சுமப்போம்!— க. அழகர்சாமி, கொச்சி.