கவிதைச்சோலை!
மெய்ப்பட முடியும்!புதைந்தே கிடக்கும்புதையல் அல்லஇங்கே பூமியை பிளந்துமுளைத்தெழும் விதைகளேமேலானவை!அஸ்திவாரத்தோடுநின்று போனதுமாளிகையே ஆனாலும்கூரை வேய்ந்தகுடில்களில் தான்வாசம் செய்ய முடியும்!உறங்குவதுஎரிமலையே ஆனாலும்எரியும் குச்சிகளில் தான்குளிர் காய முடியும்!மணலாய் படுத்திருப்பதுமறுகரை தெரியாதமகாநதியானாலும்நகர்ந்து வரும்சிற்றோடைகளேதாகம் தணிக்க முடியும்!விதைகளும், நதிகளும்எரிமலைகளும்எல்லாருக்குள்ளும் உண்டுஎன்றாலும்...அவற்றிற்கானஅங்கீகாரம் என்பதுவாடாமல்துளிர்த்துக் கொண்டிருப்பதும்நிற்காமல்ஓடிக் கொண்டிருப்பதும்அணையாமல்எரிந்து கொண்டிருப்பது தான்!களத்தில் இருக்கும் வரையாரும் தோல்வியுற்றவர்ஆகி விடுவதில்லைஎன்பதால்...பயணத்தின்முதல் அடியெடுத்துவைப்பதல்ல...தொய்வில்லாமல் தொடர்ந்துநடைபோடுவதாலேயேதொலைதூரக் கனவும்மெய்ப்பட முடியும்!— என். கீர்த்தி, கொளத்தூர்