உள்ளூர் செய்திகள்

எல்லா இடத்திலும் ஒன்று போல் தானா!

சமீபத்தில், அர்ஜென்டினா நாட்டில், பியூனஸ் அயேர்ஸ் நகரத்தில், 'டாப்லஸ்' போராட்டம் நடந்தது. இந்நாட்டு சுகாதார இலாகா, சமீபத்தில், மருத்துவமனைகளில் மட்டும் தான் பிரசவம் நடைபெற வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டது. அதை எதிர்த்து, வீடுகளில் பிரசவம் பார்ப்போர் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர். மருத்துவமனைகளில், பெரும்பாலும் அறுவை சிகிச்சையின் மூலம் தான் பிரசவங்கள் நடைபெறுகின்றன என்பது இவர்களின் குற்றசாட்டு. பணத்துக்காக, அறுவை சிகிச்சை செய்யும் தனியார் மருத்துவமனைகள், நம் நாட்டில் மட்டும் அல்ல, அர்ஜென்டினாவிலும் உள்ளது.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !