உள்ளூர் செய்திகள்

அம்மா அப்படி... பொண்ணு இப்படி!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகியும், நடிகையுமான, மடோன்னாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. மடோன்னா என்ற ஒற்றைச் சொல்லுக்கு, 1990களில் இளைய சமுதாயமே கிறுக்கு பிடித்து அலைந்தது எல்லாம் கடந்த காலம். தன் உடைகளுக்காகவே, பல லட்சங்களை செலவிடுவார் மடோன்னா. ஆனால், அவரின், 18 வயது மகள் லூர்ட்ஸ் லியோன், அநியாயத்துக்கு சிக்கனத்தை கடைப்பிடிக்கிறார்.சமீபத்தில், நியூயார்க்கில் உள்ள ஒரு கடைக்கு, பெரிய பை நிறைய, தன் பழைய துணிகளுடன் வந்தவர் அவற்றையெல்லாம், கிடைத்த விலைக்கு விற்று, பணத்தை வாங்கி சென்றார்.'ஒரு கோடீஸ்வர பிரபலத்தின் மகள், பழைய துணிகளை விற்கும் அளவுக்கு, இவ்வளவு கஞ்சமா...' என, ஒரு சிலர் புலம்பிக் கொண்டிருக்க, மற்றொரு தரப்போ, 'லியோன் அணிந்து வந்த மஞ்சள் கலர் உடை சூப்பரா இருக்குல்ல...' என, வழக்கம்போல், 'ஜொள்ளு' விட்டனர்.— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !