உள்ளூர் செய்திகள்

பூசணி - அவல் பிரேக் பாஸ்ட்!

தேவையான பொருட்கள்:துருவிய இளம் வெள்ளை பூசணி - அரை கப்அவல் - ஒரு கப்எலுமிச்சை சாறு - சிறிதளவுதயிர் - ஒரு தேக்கரண்டிகேரட் - ஒன்று (துருவியது)நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவுமஞ்சள் தூள் மற்றும் உப்பு - சிறிதளவுதாளிக்க:காய்ந்த மிளகாய் - இரண்டுகடுகு, பெருங்காயத்தூள் மற்றும் எண்ணெய் - சிறிதளவுசெய்முறை: பூசணி மற்றும் கேரட் துருவல், உப்பு, அவல், எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள், தயிர், கொத்தமல்லி மற்றும் புதினா ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசிறவும். வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து, பூசணி - அவல் கலவையை சேர்த்து இரு நிமிடம் புரட்டி எடுக்கவும்.குறிப்பு: பூசணி துருவலில் இருக்கும் நீரே, அவல் ஊறுவதற்கு போதும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !