உள்ளூர் செய்திகள்

மலைப்பாம்பு, ஹேர்ஸ்டைல்!

தென் கிழக்காசிய நாடான வியட்நாமை சேர்ந்த மூதாட்டி, நுகுயென் தி. இவருக்கு, 83 வயதாகிறது. பென் ட்ரீ மாகாணத்தில் உள்ள புத்தர் கோவிலில், 30 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.இவரது கூந்தலின் நீளம், 6 மீட்டர். பெரிய மலைப்பாம்பு போல், நெளிந்து நெளிந்து காணப்படும் இவரது கூந்தலை பார்ப்பதற்காக, தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். கூந்தலை கிடத்தி வைப்பதற்காக, அந்த கோவிலின் ஒரு பகுதியில் பெரிய திண்ணை கட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு ஓரத்தில், இந்த மூதாட்டி அமர்ந்துள்ளார். பார்வையாளர்கள், அவரது கூந்தலை தொட்டு பார்த்து, பரவசப்படுகின்றனர். இவருக்கு, 19 வயதாக இருக்கும்போது, தலைமுடியை வெட்டியுள்ளார். அதற்கு பின், கடுமையான தலைவலியால் சில மாதங்கள் துன்பப்பட்டுள்ளார். டாக்டரிடம் சென்று மருந்து சாப்பிட்ட பின்னும் தலைவலி தீரவில்லை. அதற்கு பின், முடி வெட்டுவதை முற்றிலும் தவிர்த்த அவர், அதை தொடர்ந்து பராமரித்து வருகிறார். இப்போது கூட, அவரது தலைமுடி, ஆண்டுக்கு, 10 செ.மீ., வளர்கிறதாம். — ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !