உள்ளூர் செய்திகள்

ரோபோ டான்ஸ்! வட கொரியா அசத்தல்!

எந்திரன் படத்தில், ஒரே தோற்றம் உடைய, பல ரோபோக்கள், சண்டையிடுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். இதை நிஜமாக்கியுள்ளனர், வட கொரியா நாட்டைச் சேர்ந்த, சில விஞ்ஞானிகள்.சிறிய உயரமுள்ள, 1,069 ரோபோக்களை தயாரித்து, அவற்றை, ஒரே நேரத்தில், ஒரே இடத்தில், பல்வேறு பாடல்களுக்கு ஏற்ப, நடனமாட வைத்து, சாதனை படைத்துள்ளனர். இது, கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.வட கொரியாவிடம், அணு ஆயுதம் இருப்பதால், ஏற்கனவே, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அலறி வருகின்றன. தற்போது, ஒரே நேரத்தில், ஆயிரக்கணக்கான ரோபோக்களை இயக்கும் தொழில்நுட்பத்தையும், அந்த நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதால், தங்களுக்கு எதிரான சண்டையில், இவற்றை பயன்படுத்துவரோ என, கலக்கம் அடைந்துள்ளன, அந்நாடுகள்.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !