சகலகலாவல்லி பானுமதி (18)
மயங்காத மனம் யாவும் மயங்கும்!ஜோதிடத்தில் எந்த அளவுக்கு, பானுமதியிடம் தேர்ச்சி இருந்தது?'மேடம், கைரேகை பார்ப்பார், ஜாதகம் கணிப்பார், எண் குறிப்புகளையும், சாமுத்ரிகா லட்சண சாஸ்திரமும், உடற்கூறு பற்றியும் நன்கு அறிவார்...' என்கிறார், பானுமதியின் ஆஸ்தான வசனகர்த்தா, ஆரூர்தாஸ்.'பீரோ முழுவதும் அவர் சேகரித்து வைத்திருந்த ஜோதிடம் தொடர்பான கிரந்தங்கள், புத்தகங்கள், கைரேகை ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட நுால்களையும் காண்பித்தார். பழஞ்சுவடிகள் சிலவும் இருந்தன.'படப்பிடிப்பு இல்லாத நேரத்தில், வீட்டில், நாடி கிரந்தங்களில் மூழ்கி விடுவேன். சிவலிங்க வீரேசலிங்கம் என்று ஒரு சித்த புருஷர் இருந்தார். அவரிடம் தான், கைரேகை ஜோதிட கலையை கற்றுக் கொண்டேன்...' என்று, தன்னிடம் சொன்னதை வழிமொழிகிறார், அவரை நேர்காணல் செய்த, தஞ்சாவூர் கவிராயர்.ஒரு திறமையான நடிகை எந்தளவுக்கு புகழ் பெறுவாரோ, அதே போன்று, மெல்லிசை மற்றும் 'கிளாசிக்கல்' பாடகியாக பேசப்பட்டார்; புகழ் பெற்றார்.'மாசிலா உண்மை காதலே... அழகான பொண்ணு தான்... ஆஹா... நம் ஆசை நிறைவேறுமா... வெயிற்க்கேற்ற நிழலுண்டு...என் காதல் இன்பம் இதுதானா... சும்மா கிடந்த நிலத்த கொத்தி... அசைந்தாடும் தென்றல்... கண்ணிலே இருப்பதென்ன... மயங்காத மனம் யாவும் மயங்கும்...' போன்ற, அவரின் தேன் குரல் பாடல்களில், மயங்காத மனம் யாவும் மயங்குமே. பிரபல நட்சத்திரம், அதிகமான பாடல்கள் பாடியவர், திரையுலக வாழ்வில், 145க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடிய இந்திய நடிகை, இவராக தான் இருக்கும்.தான் நடிக்கும் கதாபாத்திரத்திற்கான பாடலை, அவரே தான் பாடினார். இதில், சோலோவாக, 100 பாடல்கள் பாடியுள்ளார்.எம்.கே.டி.பாகவதருடன் ஒரு பாடல்; பி.யு.சின்னப்பாவுடன், மூன்று பாடல்; வீணை எஸ்.பாலசந்தருடன், ஐந்து பாடல்; கண்டசாலாவுடன், ஐந்து; கலைவாணருடன், ஒரு பாடல்; ஏ.எம்.ராஜாவுடன், நான்கு பாடல்; டி.எம்.சவுந்தரராஜனுடன், ஒன்பது பாடல்கள்; உஷா உதுாப்புடன், ஒரு பாட்டு என, சேர்ந்து பாடியுள்ளார்.'படங்களில் சொந்த குரலில் பாடுவதை, என் விசிறிகள் எதிர்பார்க்கின்றனர். அப்படிப் பாடவில்லை என்றால், நான் வருத்தப்படுவதை விட, அவர்கள் அதிக ஏமாற்றத்தை அடைவர் என்பதும் எனக்குத் தெரியும்.'இன்னொன்றும் சொல்கிறேன். நான் பாடிய பாடல்கள் இடம்பெறும் படங்கள் நன்றாக ஓடுகின்றன. அப்படி ஒரு ராசி எனக்கு இருப்பதாக நான் நினைக்கிறேன்.'ராஜ பக்தி மற்றும் பூவும் மொட்டும் படத்தில் நான் பாடவில்லை; படம் ஓடவில்லை. நான் பாடவில்லை என்றால், என் விசிறிகளுக்கு ஏமாற்றம் உண்டாகிறதோ அல்லது நியாயமாகப் படுவதில்லையோ... காரணம் புரியவில்லை.'வயதானவளாயிற்றே, இவளுக்கு போய் பாட்டு எதற்கு என்று, சிலர் நினைக்கலாம். பத்து மாத பந்தம் படத்தில், இதற்கு பதிலடியாக, 'பாப்' பாடல் பாடி நிரூபித்து விட்டேன்...' என்று மனம் திறந்திருந்தார்.பானுமதி என்ன தான் பரபரப்பாக, நடிப்பு, பாட்டு, இசை, எழுத்து என்று இருந்தாலும், காந்திஜியை போல, வாரம் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க தவறியதில்லை. அவருடைய உண்ணா நோன்பு எப்படி இருக்கும் என்றால்...* எனக்கு கதை எழுத தெரியும். திரைக்கதை அமைக்க தெரியும். எனவே, திரைக்கதாசிரியர் என்ற நிலையில் ஒன்றி, இயக்குனர் என்ற முறையிலேயே படக்கதையை பார்க்கிறேன்காதலின் உயர்வை, மென்மையை, புனிதத்தை எடுத்துக்காட்ட அற்புதமான சாதனம், இசை, என்கிறார், பத்மஸ்ரீ பானுமதி. — தொடரும்சபீதா ஜோசப்