பிரபல நடிகர்களை ஆட்டி வைத்த சரோஜ்கான்!
இந்தியாவின் முதல் பெண் நடன இயக்குனரான, சரோஜ்கான். மும்பையில், சமீபத்தில் காலமானார். 10 வயதில், தந்தையை இழந்தபோது, பிழைப்பு தேடி பாலிவுட்டில் நுழைந்தார். அன்றைய நடன இயக்குனர், சொகன் லாலிடம், தன்னை சிஷ்யையாக ஏற்க, பலநாள் கெஞ்சி இருக்கிறார். 12 வயதில், அன்றைய பிரபலங்களான, வைஜெயந்தி மாலா, மதுபாலா ஆகியோருக்கு, நடன இயக்குனராக இருந்தார்.சிறுமியின் திறமை கண்டு வியந்து போன சொகன் லால், 16 வயது சரோஜை, மனைவியாக்கிக் கொண்டார். அப்போது, அவர் வயது, 43. இந்நிலையில், 17 வயதில், அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார், சரோஜ். ஒரு குழந்தைக்கு தாயான நிலையில், தனியாக பணியாற்ற துவங்கினார். பிறகு, தொழில் அதிபர் ரோஷன் கானை மணந்து, முஸ்லிம் மதத்துக்கு மாறினார். கடந்த, 1980 - 90 காலங்களில், ஹிந்தியில், சூப்பர் நடன இயக்குனராக இருந்தவர், இவர்!— ஜோல்னாபையன்