உள்ளூர் செய்திகள்

செல்பி சாமியார்!

சாமியார்களில் பல ரகங்களை பார்த்துள்ளோம். ஆனால், 'செல்பி' சாமியாரை பார்த்துள்ளீர்களா? 'செல்பி பாபா 'என்று அழைக்கப்படும் இந்த சாமியார், ஆசி வழங்குவதோ, ஆருடம் சொல்வதோ இல்லை. சுற்றுலா பயணிகளுடன், 'செல்பி' எடுக்க, போஸ் கொடுப்பார். அதுவும் இலவசமாக அல்ல; பணம் வாங்கிக் கொண்டு! இமய மலையில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும், 'செல்பி' பாபா, சுற்றுலா சீசனில், லட்சக்கணக்கில் சம்பாதித்து விடுகிறாராம்!— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !