மண்டை ஓடு சர்ச்!
ஒரு சர்ச் முழுவதும், மனித மண்டை ஓடுகளால் அலங்கரிக்கப்பட்டால் எப்படி இருக்கும்? ரோமன் கத்தோலிக்க சர்ச் ஒன்று, 40 ஆயிரம் மண்டை ஓடுகளால் நிரப்பப்பட்டு உள்ளது. கடந்த, 1278ல், செக் ரிபப்ளிக் நாட்டில், 'பிளாக் பீவர்' என்ற கொடிய நோய் பரவி, மக்களை கொத்து கொத்தாக பலி வாங்கியது. அங்குள்ள இடுகாடுகளில், உடல்கள் அடக்கம் செய்ய இடம் போதவில்லை. இந்நிலையில், இடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த பிணங்களை தோண்டி, மண்டை ஓடுகளை தனியாக எடுத்து, சர்ச்சுகளில் வைத்து விட்டு, புது பிணங்களை அந்த இடத்தில் புதைக்கும்படி உத்தரவு போட்டிருந்தார், அன்றைய மன்னர். அப்போது, சர்ச்சில் வைக்கப்பட்ட, 40 ஆயிரம் மண்டை ஓடுகளை இன்றும் பாதுகாத்து வருகின்றனர். - ஜோல்னாபையன்