பாம்பு பண்ணைகள்!
ஆடு, மாடு மற்றும் கோழிகளுக்கு, பண்ணைகள் இருப்பது போல், பாம்புகளுக்கும் பண்ணைகள் இருக்கின்றன. சீனாவில் இருக்கும், ரிசிக்கியோ கிராமத்தில், உணவுக்காகவும், மருந்துக்காகவும், லட்சக்கணக்கான பாம்புகளை வளர்க்கின்றனர். சீனா போன்றே மங்கோலிய நாட்டினரும் பாம்புகளை உணவாக பயன்படுத்துகின்றனர். இவர்களுக்காக தான் பாம்பு பண்ணைகள் இயங்குகின்றன. 1980லிருந்து தான் வர்த்தக ரீதியாக பாம்புகள் வளர்க்கப்படுகின்றன. ரிஸ்க்கியோ கிராமத்தில் மட்டும், 85 குடும்பத்தினர், பாம்பு பண்ணைகளால் பிழைப்பு நடத்துகின்றனர். இவர்கள் ஆண்டு ஒன்றுக்கு, 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுகின்றனர்.— ஜோல்னாபையன்