உள்ளூர் செய்திகள்

சம்மர் கறிவேப்பிலை ரைஸ்!

தேவையான பொருட்கள்:சாதம் - ஒரு கப்கறிவேப்பிலை - ஒரு கப்மிளகு - ஒரு தேக்கரண்டிஉளுத்தம்பருப்பு - இரண்டு தேக்கரண்டிதுவரம்பருப்பு - ஒரு தேக்கரண்டிநெய் மற்றும் எண்ணெய் - தலா ஒரு தேக்கரண்டிஉப்பு - தேவையான அளவுசெய்முறை: கறிவேப்பிலையை வெறும் வாணலியில் வறுக்கவும். மிளகு, உளுத்தம்பருப்பு மற்றும் துவரம்பருப்புடன் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுக்கவும். ஆறிய பின், பருப்புகளுடன், கறிவேப்பிலை சேர்த்து, மிக்சியில் நைசாக பொடிக்கவும். சூடான சாதத்துடன் நெய், உப்பு மற்றும் அரைத்த பொடி சேர்த்து பிசைந்து சாப்பிட, உடல் குளிர்ச்சி பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !