சம்மர் ஸ்பெஷல்!
கம்பு தோசை!தேவையான பொருட்கள்:கம்பு - ஒரு கப்முழு உளுத்தம்பருப்பு - அரை கப்இட்லி அரிசி - ஒரு கப்கெட்டி தயிர் - ஒரு கப்இஞ்சி துருவல் - ஒரு மேஜைக்கரண்டிபொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப்பச்சை மிளகாய் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்.)கடுகு மற்றும் கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவுஎண்ணெய் மற்றும் உப்பு - தேவைக்கேற்பசெய்முறை: கெட்டித் தயிரை நன்கு கடைந்து, தண்ணீர் விட்டு கலக்கவும். கம்பு மற்றும் அரிசியை கழுவி ஒன்று சேர்த்து கடைந்த தயிரில், இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். உளுந்தை தனியாக நீரில் ஊற வைக்கவும். இவற்றை தனித்தனியாக அரைத்து, ஒன்றாக கலந்து, உப்பு போட்டு கரைத்து, இட்லி மாவு போல மறுநாள் வரை ஊறவிடவும்.தோசை ஊற்றுவதற்கு முன், மாவில் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி துருவல் சேர்த்து கலக்கவும். கடுகு மற்றும் கறிவேப்பிலையை சிறிதளவு எண்ணெயில் தாளித்து சேர்த்து கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு இருபுறமும் வேக விட்டு எடுக்கவும்.குறிப்பு: கம்பு மற்றும் அரிசி மாவு ரெடிமேடாக கிடைக்கிறது. அவற்றை பயன்படுத்தியும் தயாரிக்கலாம். ஆனால், சுவையும், சத்தும் ஊற வைத்து செய்வதில் தான் அதிகம்.