கோடை கால டிப்ஸ்
* நீர் மோரில் இஞ்சி, பச்சை மிளகாய்க்கு பதில் மிளகு, சீரகப்பொடி சேர்த்தால், சுவையாக இருக்கும்; கோடையில், தாகம் தீர்க்க மிக உகந்தது.* தினமும் வெள்ளரி பிஞ்சு சாப்பிட்டால், வெயிலில் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் நீர்க்கடுப்பு நீங்கும்.* குளிக்கும் தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குளித்தால், கோடையில் ஏற்படும் வியர்வை வாடை நீங்கும்; உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.