உள்ளூர் செய்திகள்

புளி அவல்!

தேவையானவை: கெட்டி அவல் - ஒரு கப், புளிக்கரைசல் - ஒரு கப், தனியா - இரண்டு தேக்கரண்டி, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு தலா ஒரு மேஜை கரண்டி, காய்ந்த மிளகாய் - ஆறு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் - சிறிதளவு, வெந்தயம் - அரை தேக்கரண்டி, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு தேக்கரண்டி, வேர்க்கடலை, கறிவேப்பிலை - சிறிதளவு, வெல்லம் - ஒரு சிறிய கட்டி, நல்லெண்ணெய் - ஒரு மேஜை கரண்டி, உப்பு - தேவையான அளவு.செய்முறை: அவலைக் கழுவி, புளிக்கரைசலில் ஊற வைக்கவும். தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் வெந்தயம் போன்றவற்றை வறுத்து, பொடி செய்து, அவலுடன் சேர்க்கவும். பின், உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் மற்றும் பொடித்த வெல்லம் போன்றவற்றை சேர்த்து, ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். கடாயில், எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை தாளித்து, அவல் கலவையை சேர்த்து, நன்றாக கிளறி இறக்கவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !