உள்ளூர் செய்திகள்

உலகம் ஒரு நூலகம் ! - ஆர்.தாமோதரன், கோவை.

* நூலகங்கள்பள்ளிக் கூடங்கள் அல்ல...ஆயினும் அவைஞானம் தருகிறஅறிவுக் கோவில்கள்!* பிறர் கற்றுக் கொடுத்துப்பெறுகிற அறிவைவிடதானே அடைகிற ஞானமேதலைசிறந்தது!* உலகம் —பள்ளிக் கூடமல்ல...நூலகம்!பயில்பவன் விருப்பமேவித்வத்தை விருத்தி செய்கிறது!* பக்கங்கள் கிழிந்தபுத்தகங்கள்தான்பலருக்கும்பயன் தந்து பரவசப்படுத்தியவை!* எழுத்துக்களின் உக்கிரங்களால்புத்தகங்கள்  என்றும்எரிந்து சாம்பலாவதில்லை!* அதுபோல்அவமானங்களால்உடைந்து போகாதவர்களேபலருக்கும் பாடம் சொல்லத்தகுதியுடையவர்கள்!* படுகிற அடிகளைப்பத்திரப்படுத்துங்கள்...விழுகிற இடங்களைகுறித்து வையுங்கள்!* அச்சடித்த புத்தகங்கள் போல்அமைதி யோடு காத்திருங்கள்...தேடி வரும் திருக்கரங்களில்புத்தகமாகிஉலக நூலகத்தில்வெற்றியாலே விருந்து வையுங்கள்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !